ரஸ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைனுக்கு தொடர் கரம் நீட்டும் கனடா
உக்ரைனுக்கு கனேடிய அரசாங்கம் 64.8 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான இராணுவ உதவியை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்த 500 மில்லியன் கனேடிய டொலர் இராணுவ நிதியில் ஒரு பகுதியாகவே இது வழங்கப்படவுள்ளது.
இராணுவ உதவி
இதற்கமைய, இந்நிதி உதவி மூலம், ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் போராட தேவையான முக்கிய வளங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அவர்களின் வெற்றியை நிலைநாட்ட கனடா தொடர்ச்சியாக ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் ப்ளேர் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடா, உக்ரைனின் பல்வேறு சர்வதேச ஆதரவாளர்களில் முக்கியமானதாக இருந்து வருகிறது.
செப்டெம்பர் மாதத்தில், கூடுதலாக உள்ள 80,840 ஏவுகணைகள் மற்றும் 1,300 வெடிகுண்டு சாதனங்களையும் வழங்க முடிவு செய்தது.
அதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனில் படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, கனடா 4.5 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான இராணுவ உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |