கனடா மக்களிடையே அதிகரிக்கும் பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் வட மேற்கு ஒன்றாரியோ பகுதியில் வாழும் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினையை சந்திப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வட மேற்கு ஒன்றாரியோ பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் விசனம்
வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட மாதாந்த கொடுப்பனவுகளை செலுத்துவதா அல்லது உணவு கொள்வனவு செய்வதா என்ற நெருக்கடியை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
கட்டணங்களை செலுத்தாவிட்டால் வீட்டை இழக்க நேரிடும் எனவும், கட்டணங்களை செலுத்தினால் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில், தன்டர்பே பகுதியில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதாந்த உணவுச் செலவு 1200 டொலர்களாக காணப்பட்டது.
இது அதற்கு முந்தைய 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 15 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
