ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு எதிராக கனடாவில் பொருளாதார உச்சி மாநாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக கனடா பொருளாதார உச்சிமாநாடு நடத்தவுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா விதிக்கும் வரிகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள வணிக மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் டொரொண்டோவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லை மற்றும் குற்ற நடைமுறையாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக கனேடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதை 30 நாட்களுக்கு தாமதப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
வணிகத் தலைவர்கள்
கனடாவின் 75% ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது, எனவே பொருளாதாரத்தை வலுப்படுத்த வழிகளை தேடுவது அவசியம் என ட்ரூடோ கூறியுள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்கள், தொழில்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கனேடிய பிரதமர் அலுவலகம் இதில் பங்கேற்க தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை.
மேலும், இந்த உச்சிமாநாடு, அமெரிக்கா சார்ந்த பொருளாதாரத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையை குறைத்து, கனடாவுக்கென தனி வளர்ச்சிப் பாதை உருவாக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 6 மணி நேரம் முன்

22,000 டன் எடை, 2,051 அடி நீளம்.., உலகின் மிக உயரமான பாலம் எங்கு அமைந்துள்ளது தெரியுமா? News Lankasri
