கனடாவில் காலணி விற்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்: மூவர் கைது
கனடா ஒண்டாரியோவில் ஒன்லைன் காலணி விற்பனையாளாரை தாக்கி கொள்ளையடித்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயர்தர காலணிகளை விற்றுக்கொண்டிருந்த குறித்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விற்பனையாளர், வாகன நிறுத்துமிடத்தில் தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்துள்ளார்.
இதன் பின்னர், வாடிக்கையாளருக்கு அவர் தனது விற்பனை பொருட்களை காட்டியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, பொருளை வாங்க வந்தவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் அவரை தாக்கி நகைகள், பணப்பை மற்றும் மூன்று ஜோடி காலணிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, ஒரு சந்தேகநபர் தனது கையில் கத்தி ஒன்றையும் வைத்திருந்ததாக விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் தாக்குதல் நடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்னுமொரு சந்தேகநபரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri