குண்டுத் தாக்குதலின் எதிரொலி - இஸ்ரேலிடம் விளக்கம் கோரும் கனடா
காசாவில் (gaza) மக்களுக்கான தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த டிரக் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா (Canada) இஸ்ரேலிடம் (Israel) தகவல் கேட்டுள்ளது.
டொராண்டோவை (Toronto ) தளமாகக் கொண்ட உதவி அமைப்பான சர்வதேச வளர்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை (IDRF) காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக "சுத்தமான குடிநீரை" வழங்கி வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த தண்ணீர் டிரக் மீது கடந்த வெள்ளிக்கிழமை குண்டுவீசப்பட்டதாக (IDRF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம்
கனடாவின் (Canada) சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹ்மத் ஹுசென், தனது அலுவலகம் காசாவில் தனது தண்ணீர் டிரக் குண்டுவீசித் தாக்கப்பட்டதாகக் கூறியதை அடுத்து, "மேலும் தகவலுக்காக" இஸ்ரேலை (Israel) அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் விரைவாகவும் தடையின்றியும் நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியமானது" என்று ஹசன் சமூக ஊடகத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
எனினும் தாக்குதலால் தனது குழுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இல்லை என ஐ.டி.ஆர்.எஃப் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |