பலஸ்தீனம் குறித்து அவுஸ்திரேலியா- கனடா மற்றும் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு
பலஸ்தீனம் தொடர்பில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கின் காசாவில் கடுயைமான போர் பதற்றம் நிலவி வரும் பினன்ணியில் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு அழுத்தம்
இந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியா அதிகாரபூர்வமாக பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஸ்டார்மர் இன்று(21) அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது சமாதானத்திற்கான ஓர் முயற்சியாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் கூறுவபோது இது ஹமாஸுக்கு வெகுமதி அல்ல எனவும் ஹமாஸுக்கு எதிர்காலம் இல்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெற்று வரும் பேரழிவு முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும்,” என ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாலஸ்தீன மக்களின் நீண்டகால கனவை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்
கடுமையாக விமர்சனம்
இது சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனுவும், இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலஸ்தீனத்தை ஓர் நாடாக அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பலலஸ்தீன நாட்டையும், இஸ்ரேல் நாட்டையும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிநடத்த பங்காளிகளாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை விரும்பும் பலஸ்தீன மக்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியாவின் தீாமானத்தினை இஸ்ரேல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இஸ்ரேலை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த முயற்சிக்கப்படுவதாக இஸ்ரேல் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.




