என்ன நடக்க போகிறது என்பதை கணிக்க முடியாது:மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்
இலங்கை மத்திய வங்கி ரூபாயை மிதக்க விட்டுள்ள விதம் தவறானது எனவும் இதனால், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பதை கணிப்பது கடினம் என அந்த வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்டுப்படுத்த முடியாத பிரேக் இல்லாத வாகனத்தை வீதியில் விட்டுள்ளது போல், தற்போது ரூபாய் மிதக்கவிடப்பட்டுள்ளது. இதனால், வாகனம் எந்த இடத்தில் முட்டி மோதி நிற்கும் என்பதை கூற முடியாது.
இதன் காரணமாக ரூபாவின் பெறுமதி 30 முதல் 40 வீதமாக குறைந்துள்ளது. அத்துடன் கறுப்பு நிதி சந்தை அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் ஏ.எஸ். ஜயவர்தன ரூபாயை மிதக்க விட்டார், அப்போது வாகனத்தை கட்டுப்படுத்தக் கூடிய பிரேக்குடன் வாகனத்தை வீதியில் விட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் அவர் ரூபாயை மிதக்க விட்டார்.