பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியாது:போக்குவரத்து அமைச்சர்
பேருந்து கட்டணங்களை இந்த சந்தர்ப்பத்தில் அதிகரிக்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Vanniyarachchi) தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்வது அவசியம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், உடனடியாக பேருந்து கட்டணங்களில் மாற்றங்களை செய்ய முடியாது.
பேருந்துகளுக்கு சலுகைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில், விசேட சலுகை பொதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
