மக்களின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது – வைத்தியர் அர்ஜூன டி சில்வா
மக்களின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ராகம போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பேராசிரியர் வைத்தியர் அர்ஜூன டி சில்வா(Arjuna De Silva) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மக்கள் அவதானமின்றி செயற்பட்டால் மீண்டும் கோவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்றாக இணைந்து உணவு உட்கொள்வது, காற்று சீராக்கி பயன்படுத்தப்படும் இடங்களை முடிந்தளவு தவிர்த்தல் ஆகியனவற்றை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் முகக் கவசம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை முடிந்தளவு பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 முதல் 30 வயதானவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முடக்கப்பட்டதன் முழு நலன்களையும் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர் கண்டுகொள்ள முடியும் என வைத்தியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்கிய காரணத்தினால் கோவிட் மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் பரவுகை நியாயமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam