இனப்பிரச்சனையை தீர்க கூடிய ஒரே கட்சி தமிழர் விடுதலை கூட்டணிதான் : வீ. ஆனந்தசங்கரி

Government Batticaloa Tamilpeople 13thamendment
By Kanamirtha Mar 03, 2022 09:40 AM GMT
Report

இந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய தகுதி, தத்துவம் எல்லாம் உள்ள ஒரே ஒரு கட்சி தமிழ் விடுதலை கூட்டணி மாத்திரம் தானே ஒழிய வேறு எந்த கட்சியாலும் முடியாது எனத் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்கள் நாளுக்கு நாள் வேறு வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கிச் செல்லுகின்றனர். உண்மையில் நாட்டிலே எந்த பிரச்சனை இருந்து அதற்கு என்ன தீர்வு காண ஆரம்பித்தோமே அதை எல்லாம் படிப்படியாக மறந்து இப்போது புது புது பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் இனப்பிரச்சினையைத் தெரிவிக்கும் போது எங்களுடைய அந்த பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு கட்சி ஆரம்பித்து வருகின்றது. இதனால் உண்மையான தமிழ் மக்களின் பிரச்சனை வலுவிழந்து போகின்றது, இதனை எவரும் உணர்வதாக இல்லை.

எங்களுக்கு முக்கியமான பிரச்சனை இனப்பிரச்சினை, அதனை எத்தனையோ விதமாகத் தீர்க்கலாம். இரகசியமாகத் தீர்க்கவேண்டியதை ஒருவரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. எங்களுடைய தலைவர்களின் கோரிக்கையை இந்தியா அரசாங்கம் தலையிட்டு இன்ன இன்ன பிரச்சனைக்கு இன்ன தீர்வு தரவேண்டும் என இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தித் தீர்வை கோரி அதனை இந்திய அரசாங்கம் தர முன்வருமாக இருந்தால் இங்கே எதிர்ப்பு தான் கூடிக் கொண்டுபோகுமே தவிர ஆதரவு கிடைக்காது.

ஆகவே நாங்கள் சிந்திக்காதளவுக்கு சிந்திக்கின்றவர்கள் இருக்கின்றனர். எனவே உள்நாட்டில் இந்த பிரச்சனையைத் தீர்க்கவேண்டும். ஒரு நாட்டின் உதவி கேட்கின்ற போது சம்மந்தப்பட்ட நாடு இலகுவாகச் சம்மதிக்குமா? எனச் சிந்திக்கவேண்டும்.

எனவே இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு இராஜதந்திரம் தெரியவில்லை. இவர்கள் என்ன என்ன கேட்கின்றார்களே அதே விஷயங்களை நான் கேட்டிருக்கின்றேன். சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நான் முன்வைத்தவன்.

அது இந்திய ஆட்சி முறை தான். எனவே இந்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட அதிகாரத்துக்கு மேலாகக் கடுகளவும் கேட்கமுடியாது, அவர்களும் தரமாட்டார்கள். இன்று எமது தலைவர்களின் அணுகுமுறை முற்று முழுதும் ஏற்கக்கூடியது அல்ல, அது எங்களுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கும். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள்தான் தலைவர்கள்.

நாட்டிலே எத்தனையே படித்த புத்திஜீவிகள் துரதிருஷ்டவசமாக வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றபோது என்ன என்ன கோலத்தில் வந்த ஒரே கோஷ்டிதான் இவர்கள். இந்த பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை, தீர்க்க முடியாமல் செய்கின்றனர்.

13வது திருத்தச்சட்டம் இந்திய அரசு வாதாடிப் பெற்ற விடயம். எல்லோருக்கும் தெரியும் 13 திருத்தத்தில் அதைப் புகுத்த வேண்டும் என ஒருபகுதி, 13வது வேண்டாம் என ஒருபகுதி தெரிவித்து வருகின்றனர். சமஷ்டி முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட விடயம்.

எந்த அரசு வந்தாலும் சமஷ்டியைக் கொடுக்காது ஏன் என்றால் ஒரு சந்தர்ப்பத்தில் சமஷ்டி கொடுக்கப்பட்டது. 2006 ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியை முன்வைத்து போட்டி போட்டவர். அப்போது எதிராக மகிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியைவைத்து போட்டி போட்டார். ஒற்றை ஆட்சிக்கு 50.2 வீதமானதும் சமஷ்டிக்கு 49.2வீதமான வாக்கு கிடைத்தது.

அப்போது எமது தலைவர்கள் வீடுவீடாக சென்று தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் தேர்தலை பஷ்கரிக்குமாறு கோரினர். அன்று எமது மக்கள் வாக்களித்திருந்தால் 3 இல் 2 ரணில் பெற்று சமஷ்டி தீர்வை பெற்றிருக்க முடியும். ஆனால் இப்படி காலத்துக்குக் காலம் வந்த வாய்ப்புக்களையும் இழந்து வரக்கூடிய வாய்ப்புக்களுக்கு முட்டுக்கட்டையிட்டு உள்ள தலைமை மாறவேண்டும்.

பயங்கரவாத தடை சட்டம் எப்போது வந்தது, அது வரும் போது நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றோம். அப்போது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அது நடந்திருக்கலாம். அதில் நாங்கள் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனால் தப்பு பண்ணி இருக்க முடியாது,

ஏன் என்றால் பெரும்பாலானவர்களின் ஆதரவுடன் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால் அதை எதிர்க்கலாம் ஒழிய இல்லாமல் செய்யமுடியாது. ஆகவே அப்போதைய எங்கள் தலைவர்களைக் குற்றம் செல்லமுடியாது. இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 40 வருடத்துக்கு மேலாக உள்ளது. இந்த பயங்கரவாத தடை சட்டம் ஏதோ இப்போது வந்தது என்ற மாதிரி பாடசாலை பிள்ளைகள் வந்து கையெழுத்து வைக்கின்றனர்.

என்ன கையெழுத்து வேட்டை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு என இதனை அரசு செய்யுமா? தமது பலம் குறைந்து கொண்டு போகின்ற நிலையில், வரலாறு தெரியாத ஆட்களை வைத்து அரசியல் செய்கின்றனர். அரசியல் தெரியாவிட்டால் நான் சொல்லித் தருகின்றேன். முதலில் நாங்கள் இராஜதந்திரத்தை கற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த கையெழுத்து வேட்டையால் தனிப்பட்ட முறையில் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர அதனை கூட்டிப் பார்க்கும் போது அது எங்களுக்குப் பாதகமாக முடியும். ஆகவே இந்த 13வது திருத்தச் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம். இந்தியத் தலையீடு, ஐ.நாடுகள் சபை, இப்படியானதை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இந்த பிரச்சனையைத் தீர்க்கவேண்டும் என்றால் 13வது திருத்தச் சட்டம் நல்லது இதற்கு அரசாங்கம், மற்றும் சிங்களவர்கள் உட்படப் பல புத்திஜீவிகள் ஆதரித்து வரவேற்றுள்ளனர். எனவே இன்றுவரைக்கும் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காது செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

அது எங்கே போய் முடியப்போகின்றது எனத் தெரியாது, எனவே நீங்கள் செய்வது பெரிய தப்பு எனவே எது நடக்கும், எது செய்யக் கூடியது, எது செய்யக் கூடாது எது இன்று செய்யமுடியுமே அது பின்னுக்குச் செய்யமுடியாது எனச் சிந்திக்கக் கூடிய திறமை உள்ளவர்கள் எம்மத்தியில் இருக்கின்றனர்.

எனவே நல்ல கற்றார்கள் எல்லோரும் அரசியலில் வாருங்கள் என எனது வேண்டுகோள். அதனை விட்டு 6 பேர் மட்டும் போகா விட்டால் என்ன, போனால் என்ன என்று சொல்லுகின்றவர்கள் தான் இன்று தலைவராக இருக்கின்றனர். எங்கள் மத்தியில் இருக்கின்ற துன்பமான விடயம் பதவி.

பதவியைத் தவிர எங்களுடைய மக்களின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கவேண்டும். இஸ்லாமிய மக்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு அவர்களும் தமிழ் மொழி பேசுபவர்கள். எனவே அவர்களைத் தந்தை செல்லா தமிழ்பேசும் மக்கள் என்று உருவாக்கியவர், அவர்கள் எமது கட்சி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தமை, சிங்களவர்கள் எமது சகோதரர்கள் எமக்கும் அவர்களுக்கும் இருக்கும் பிரச்சனையைத் தீர்க்கலாம் அதைத் தீர்க்கக் கூடியவை சிந்தனை யாருக்கு வருகின்றது.

வரலாறு தெரியாதவர்களை வைத்து கையெழுத்து வேட்டை நடக்கின்றது. எங்கள் இனத்தைக் காப்பாற்ற இந்த சந்தர்ப்பத்தை விட்டால், நாங்கள் அழிந்து என்றைக்கும் தீர்க்க முடியாதா ஒரு சமுதாயம் சிங்களவர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் வெறுப்புடன் வளர்ந்து வருகின்றது.

எங்களுக்குக் கிடைத்த 10 பேர் இருக்கின்றனர். அவர்கள்தான் அரசில் செய்துவருகின்றனர். இது ஒதுக்கப்படவேண்டியது, எத்தனையே படித்த நிபுணர்கள் இருக்கின்றனர். எனவே நான் தலைமைகளிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றேன் பதவி, உட்பட எல்லாத்தை மறந்து பழைய சிந்தனைகளுடன் இருக்கின்றவர்கள் இருக்கும் போது இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US