இரணைதீவு கடற்றொழிலார்கள் தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யலாம்! கிளிநொச்சி அரச அதிபர்
இரணைதீவு கடற்றொழிலார்கள் அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்ய முடியும் என கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்ரன் தெரிவித்துள்ளார்.
இரணைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வட மாகாண ஆளுநர் தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட அரச அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இரணைதீவு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இரணைதீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவிலேயே முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
குறிப்பாக பாடசாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கடல் போக்குவரத்து தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடற்தொழிலாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்ற பிரச்சினையான, தங்களுடைய தொழில் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் கேட்டபோது, இரணைதீவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டைகளை காண்பிக்கும் பட்சத்தில் அவர்கள் தொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri