டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை கொடுக்கல் வாங்கல் குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு
டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மூலம் செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கு 2.5% அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் கட்டணங்களை விற்பனையாளர்கள் (வணிகர்கள்) பெறுவதை சட்டப்படி அனுமதிக்க முடியாது என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெளிவுபடுத்தியுள்ளது.
முடிவுசெய்யப்பட்ட வங்கி ஒப்பந்தத்தின் அடிப்படையில், விற்பனையாளர்கள் அட்டை இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக வங்கியுடன் ஒப்பந்தம் செய்வதற்கும், வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு விற்பனையாளர் பட்டியலிலுள்ள விலையைவிட அதிகமாக கட்டணம் கேட்டால், உடனடியாக அந்த வாடிக்கையாளர் தனது அட்டை வழங்கிய வங்கியில் முறைப்பாடு செய்ய வேண்டும்” என மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை கொடுக்கல் வாங்கல்களின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதனையே தடுக்கவே மத்திய வங்கி இவ்விளக்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 20 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
