அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடி இருக்கலாம்: ஹர்ஷன ஆதங்கம்
நான் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அதிலும் அவர் சிறந்த பந்து வீச்சாளர்.
அவர் படித்த கொழும்பு றோயல் கல்லூரி கழகத்தின் ஆரம்ப பந்துவீச்சாளராக விளையாடியவர்.
மோசமான அரசியல்
அந்தச் சுவையான அனுபவங்களை அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாட்டி இருக்கலாம் போல் தோணுகின்றது என்று பதிலளித்துள்ளார்.
இந்தளவு மோசமானது இந்த அரசியல் என" அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |