கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டால் குழந்தையின்மை ஏற்படும் என போலியான பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 4 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் போலிப் பிரச்சாரங்களால் நினைத்த எல்லையை நெருங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இளம் வயதினர் தடுப்பூசி பெறுவதற்கு விரும்புவதில்லை. இதனால் இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது
பாலியல் மலட்டுத்தன்மை, குழந்தை பாக்கியமின்மை போன்ற போலி பிரச்சாரங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
விசேடமாக முஸ்லிம் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதனை நிகராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.