தையிட்டி போராட்டத்திற்கு அணி திரளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் அழைப்பு
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நாளைய தினம் (03.01.2026) நடத்தப்படவிருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்தில் கட்சிகள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொண்டு எதிர்ப்புக்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் விடுத்துள்ளார்.
பிரிவினைகளை மறப்போம்
ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், தமக்கு ஒரு பிரச்சினை வரும்போது தங்களது பிரிவினைகளை மறந்து ஒற்றுமையாக ஒன்று சேருகின்றனர்.

ஆனால் நாம் பல்வேறு வகையில் பிரிந்திருக்கின்றோம். எல்லாவற்றையும் மறந்து நாளைய தினம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒன்று திரண்டு எதிர்ப்பு வெளியிட வேண்டும் என கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri