சந்திரிகா, குமார வெல்கம ஆகியோரை மீண்டும் கட்சியில் இணையுமாறு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோரை கட்சிக்கு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியில் இருந்த கட்சி ஆர்வலர்களை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தித் தொடர்பாளர், கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வர திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த துணைத் தலைவர் மஹிந்த அமரவீர, அத்தகையவர்களுக்கு கட்சி திறந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.