கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி
குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டு பிக்குகளும் அடங்குவர். விபத்துக்குள்ளான கேபிள் காரில் அந்த நேரத்தில் 13 பிக்குகள் பயணித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்குகள் பலி
உயிரிழந்தவர்களின் உடல்கள் கோகரெல்லை மாவட்ட வைத்தியசாலையிலும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பிக்குகளின் உடல்கள் கோகரெல்லையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களின் உடல்கள் குருநாகலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பலர் கடுமையாக காயமடைந்து தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



