சிவனொளிபாத மலையில் விரைவில் கேபிள் கார் வசதி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி சிவனொளிபாத மலையில் மிக விரைவில் கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் மேற்குறித்த கேபிள் கார் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்
சுற்றுலாத்துறை அபிவிருத்தி
இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின்போது சிவனொளிபாத மலையில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
சிவனொளிபாத மலைக்கு மேலதிகமாக கிகிளியமான மலையுச்சி மற்றும் எல்ல பிரதேசங்களிலும் கேபிள் கார் வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த இடங்களில் சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதி பெற்றுக் கொள்வதற்கான நிறுவனங்களிடம் அதற்கான சமர்ப்பணங்களை மேற்கொள்ளவும் குறித்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan