ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதா தொடர்வதா? அமைச்சரவைப் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நீக்குவதா அல்லது மேலும் நீடிப்பதா என்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன(Ramesh Pathirna) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.
விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கோவிட் தடுப்பு செயலணிக்குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri