திடீர் அமைச்சரவை மாற்றத்தின் பின்னணியில் ரணிலின் இரகசிய திட்டம்(Video)
ஜனாதிபதி சீனாவிற்கு சென்று வந்ததன் பிறகு தனது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க இருப்பதன் காரணமாக இவ்வாறு மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி ரணில் முயற்சிக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஓரிரு வருடங்களுக்கு மேலாக சுகாதார அமைச்சு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பொதுஜன பெரமுன காப்பாற்றி வந்தது.
சுகாதார அமைச்சை கெஹலிய திறம்பட நடத்தவில்லை. இவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அந்த பதவியில் இருந்து நீக்கி வேறு ஒரு அமைச்சு பதவியை ரணில் விக்ரமசிங்க கொடுத்திருக்கின்றார் என குறிப்பிட்டார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
