இலங்கையில் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
சீனாவின் சினோப்பெக் நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தம் ஒன்றை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இதற்கமைய ஹம்பாந்தோட்டை புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு செயலாக்க மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீனாவின் சினோப்பெக் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Cabinet approval was granted today to award the contract to China Petroleum & Chemical Corporation (SINOPEC) of China, to enter into an agreement to establish a new Petroleum Refinery & Associated Product Processing center in Hambantota.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 27, 2023