உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல்
உண்மை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய சட்டமூலம்
இலங்கையில் உண்மை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டமூலத்தை திருத்தியமைக்கும் புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கான முன்மொழிவு, 15-07-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
இந்தநிலையில் திருத்தப்பட்ட பிரேரணைக்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்குமான கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |