ஒரு குப்பி சைனோபார்ம் தடுப்பூசி மருந்தை 15 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசி மருந்தின் ஒரு குப்பியை 15 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்த 24 ஆம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்த பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15 டொலர்கள் என்ற விலையில் சீனாவிடம் இருந்து 14 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இதனிடையே சைனோபார்ம் தடுப்பூசி மருந்து பங்களாதேஷ் நாட்டுக்கு 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
15 மில்லியன் தடுப்பூசி மருந்துகளைச் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பங்களாதேஷ் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி மருந்துகள் ஏனைய நாடுகளுக்கு சுமார் 45 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan