புதிய மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி
நான்கு புதிய மேம்பாலங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
ஹங்கேரி மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையேயான நிதி ஒத்துழைப்பின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
இதன்படி, குருணாகல் - முத்தெட்டுகல தொடருந்து கடவை, ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, குறித்த இடங்களில் மேம்பாலங்கள் 04 மேம்பாலங்களை அமைப்பதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடை முறைப்படுத்து வதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங் கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri