எட்டு மாதத்திற்கு தேவையான பெட்ரோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
எட்டு மாதங்களுக்கு தேவையான 18 லட்சம் கொள்கலன் ஒக்டேன் 92 ரக பெட்ரோலை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் நிறுவனம் ஒன்றிடம் இருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை பயன்படுத்துவதற்காக இந்த பெட்ரோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த்தை வழங்க, பதிவு செய்யப்பட்ட மற்றும் தற்காலிகமாக பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
அமைச்சரவை நியமித்துள்ள கொள்முதலுக்கான நிரந்தர குழுவின் பரிந்துரைக்கு அமைய இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் ஓக்யூ டிரேடிங் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது சம்பந்தமான யோசனையை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.