துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உச்ச நீதிமன்றம் விதந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.
துறைமுக நகர் ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலத்தின் சில சரத்துக்களில் ஆணைக்குழுவிற்கு ஏதேச்சாதிகாரம் கிடைக்கும் வகையிலான விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் அமைப்பிற்கு முரண்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றிற்கு சட்ட விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள இயலும் என்று அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள், அரசியல் அமைப்புடன் இணங்கவில்லை. எனவே அவற்றை மீள்திருத்தம் செய்து அல்லது சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற முடியும் என்ற உயர்நீதிமனறம் வியாக்கியானம் வழங்கியிருந்தது. இதனை சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்தே அரசாங்கத்தின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
