கருங்கற்களை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்:கிடைக்கப்பெறவுள்ள பெருந்தொகை டொலர்கள்
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக நிர்மாணப் பணியின் போது அகற்றப்பட்ட கருங்கற்களை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாகம்புர துறைமுக பகுதியின் நிர்வாக கட்டடத்திற்கு அருகாமையிலும் ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் வரையிலான கற்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க குழுவினை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருங்கல் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டுகின்ற வேலைத்திட்டமொன்றை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்த இந்த திட்டம் பொருத்தமானதெனவும் கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam