2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்
எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.