இலங்கையில் வெற்றிப்பெறப்போவது அமைச்சர்களா? அஜிட் நிவாட் கப்ராலா?- எதிர்பார்க்கப்படும் முடிவு! (காணொளி)
இலங்கை தற்போதைய பொருளாதார சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறவேண்டும் என்று கோரிக்கை அரசாங்க அமைச்சர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
அமைச்சர் சி பி ரட்நாயக்கவின் கருத்துப்படி, அரசாங்கம், வெளிநாட்டுக் கடன் தீர்த்தலுக்காக பல பில்லியன்களை செலுத்தவேண்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நிலையில், இதனை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மாத்திரமே தீர்க்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நியத்திடம் சென்றால், அமைச்சரவையில் பிளவு ஏற்படும் என்ற தகவல்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், அரசாங்கத்தின் பெரும்பாலான அமைச்சர்கள் மத்தியில் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறவேண்டும் என்று கருத்தே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் பந்துல குணவரத்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லக்கூடாது என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள காணொளியை பாருங்கள்!





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
