மியன்மாரில் இருந்து 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி
இலங்கைக்கு அரிசி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாத 27ஆம் திகதி அரசாங்கத்துக்கு - அரசாங்கம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் தற்போது நுகர்வோருக்கு பயன்தரும் வகையில் 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரசியை இறக்குமதி செய்ய நேற்று கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்
இதேவேளை தேர்தல்களில் மக்களின் விருப்பத்தொிவுக்கு முரண்பாடாக வேட்பாளர்களால் அதிகளவு பணம் செலவிடப்படுவதை தவிர்க்கும் வகையில் அமைச்சரவையில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி சட்ட வரைவை தயாரிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாது என்றும் அமைச்சர் தொிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களுக்கு உரியநேரத்தில் வேதனங்கள் கிடைப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பத்திரன, பிரச்சனைகளை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam