கொழும்பில் பெரும் துயரம் - நீரில் இழுத்துச் செல்லப்பட்ட வாகனம் - இருவர் பலி
கொழும்பின் புறநகர் பகுதியில் தும்மோதர கால்வாயை கடக்க முயன்ற கெப் வண்டியொன்று திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தினால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கொஸ்கம - எஸ்வத்த மாணக்கட வீதியில் ரபுகேவத்த பக்க வீதியில் தும்மோதர கால்வாய் பகுதியில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தும்மோதர கால்வாயை கடக்க சென்ற கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி பலி
சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட 04 பேர் பயணித்துள்ளனர். கேப் சாரதியும் அதன் உரிமையாளரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 69 வயதுடைய பலல்கொடுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam