தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சி.வி. விக்னேஸ்வரன்
அழிவுகரமான அடிமட்ட கடற்றொழில் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையில் உள்ள சாதாரண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்று இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கூறியுள்ளார்.
எனவே, நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
சி . வி.விக்னேஸ்வரனின் அலுவலகம், ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்ட, ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், இந்த விடயங்கள் அடங்கியுள்ளன.
100க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
கடலின் அடிப்பகுதியில் இருந்து மீன், இறால், முட்டைகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களை வெளியேற்றும் அடிமட்ட இழுவை மீன்பிடித்தல் ஏற்கனவே தமிழக கடற்கரையில் உள்ள கடல் வளங்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்தநிலையில், இந்த கடற்றொழில் நடைமுறை தொடர்ந்தால், இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள வளங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2025, ஜனவரி முதல், இலங்கை கடற்படை இலங்கையின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 100க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளது.
கடந்த வார இறுதியிலும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக கடற்றொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
