கஜேந்திரகுமாருக்கு சிவஞானம் கடிதம்..! ஒற்றுமை முயற்சிக்கு முற்றுப்புள்ளி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்த ஒற்றுமை முயற்சிக்கு இலங்கை தமிழரசுக்கட்சி முடிவு கட்டி இருக்கின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் கஜேந்திரகுமார் ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார்.
அதாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்றில் அரசியலமைப்பை முன்வைக்கும் போது அதனை வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் தமிழ் மக்களது தீர்வு இதுதான் என அநுர அரசாங்கத்தால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.
ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) இது குறித்து எந்நவொரு பேச்சுவார்த்தையும் அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |