அடுத்து வரும் தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சி.வி.கே.சிவஞானம் அறிவுறுத்தல்
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற (21.04.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6ஆம் திகதி தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். அதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.
தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகள்
ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குதிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதேநேரம் தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு கிழக்கில் 58 சபைகளால் போட்டியிடுகின்றது.
இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது. கடந்த காலத்தில் வட மாகாணசபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்படது என்பதை எவராவது நிரூபியுங்கள்.
திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு இதை நான் சாவாலாகவும் விடுகின்றேன். தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போடியிடுகின்றது. ஆனால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
