டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்த சிறீதரன்
நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாளும் அல்ல பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sreedharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறிதரன் உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (Douglas Devananda) இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சிறிதரனின் உரையை குறுக்கீடு செய்த டக்ளஸ்,
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.
அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம் என கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
