இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் என பெயரிடுங்கள் - எலோன் மஸ்க்கிடம் பரிந்துரை
டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை வாங்கலாம் என ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்ல், டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கிடம் பரிந்துரைத்துள்ளார்.
எலோன் மஸ்க் 43 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்த அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“டுவிட்டரின் பெறுமதி 43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இலங்கையின் கடன் 45 பில்லியன் டொலர்கள் என குறிப்பிட்டுள்ள ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் என்று அழைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
Elon Musk's Twitter bid - $43 billion
— Kunal Bahl (@1kunalbahl) April 14, 2022
Sri Lanka's debt - $45 billion
He can buy it and call himself Ceylon Musk ?
H/t Whatsapp
இதேவேளை, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது டுவிட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டொலர் கொடுத்து வாங்க தயார் என அவர் அறிவித்துள்ளார்.
மொத்த விற்பனைத் தொகையும் பணமாக அளிக்கத் தயார் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
