நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை: மட்டக்களப்பு விவசாயிகள் விசனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை என மட்டக்களப்பு விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிலையிலேயே விவசாயிகள் குறித்த கோரிக்கையினை அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளனர்.
விலை நிர்ணயம்
கடந்த ஆண்டுகளில் 80ஆயிரம் ஏக்கரே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கை பண்ணும் நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிஞ்சியுள்ளதை அறுவடை செய்து வருகின்றனர்.
ஆனால் இதுவரையில் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அத்துடன் இதுவரையில் நெல்லுக்கான விலைகளும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
எனவே அரசாங்கம் நெல்லுக்கான விலையினை நிர்ணயம் செய்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என சுட்டிக்காட்டியள்ளார்.
நெல் கொள்வனவு
மேலும், தனியார் நெல்லை கொள்வனவு செய்யும் நிலையேற்பட்டால் விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைகளே வழங்கப்படும். எனவே அரசாங்க அதிபர் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |