லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் தேர்வு
லண்டன் - சவுத்வார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளி தொழிலதிபர் 2வது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பிறந்த சுனில் சோப்ரா சவுத்வார்க் கதீட்ரலில் நேற்று மேயராக பதவியேற்றுள்ளார்.
இவர் 2014-2015 இல் 'லண்டன் பரோ ஆப் சவுத்வார்க்' என்றழைக்கப்படும் லண்டன் மாநகரின் உள்ளூர் நகரமான சவுத்வார்க் நகரத்தின் மேயராகவும், 2013-2014 இல் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
போரோவில் மதிப்புமிக்க அலுவலகத்தை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் அவர் என்பதுடன், இவர் மூன்று முறை துணை மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதை எண்ணமாக கொண்டு சோப்ரா செயல்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri
