பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணம் - கொழும்பு நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டதாக கொழும்பு நீதிமன்றம் இன்று(01) அறிவித்துள்ளது.
ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று(01.11.2023) தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு
மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த முடிவை அறிவித்தார்.
இச்சம்பவத்தின் மூலம் குற்றச் செயல்கள் வெளிவரும் எனவும், அதற்கமைவாக சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடம் வழங்கிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நிதி அமைச்சை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டம்! முன்னேற முற்படும் போராட்டக்காரர்கள் - தயார் நிலையில் பொலிஸார்(Video)
You May like this





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
