டுபாயிலிருந்து வந்திறங்கிய வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட விஸ்கி போத்தல்கள் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான வர்த்தகர் டுபாயிலிருந்து இன்று (16) அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை
இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 69 விஸ்கி போத்தல்கள் மற்றும் 2,380 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட விஸ்கி போத்தல்கள் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகளின் பெறுமதி ஒரு கோடி ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
