கொழும்பில் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மரணத்தில் தொடரும் குழப்பம்! பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் வாகனத்துடன் தப்பிச்சென்ற தம்பதியினர் இன்னும் நாட்டில் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தம்பதியினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்பட்ட நிலையில் இதுவரை வெளியேறவில்லையென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த தொழிலதிபரின் பண அட்டை மூலம் 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி, இந்தோனேஷியா செல்வதற்காக இரண்டு விமான டிக்கெட்டுகளை தம்பதியினர் முன்பதிவு செய்துள்ள நிலையில் வெளியேறியமைக்கான ஆதாரங்கள் இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், எதிர்வரும் காலங்களில் தம்பதியினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பெலவத்தை பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை நேற்று (03) நடத்தப்படவிருந்த போதிலும், சடலத்தை அடையாளம் காண முடியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன தொழிலதிபரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த சடலம் கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 49 வயதான வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் என சந்தேகிக்கப்படும் சடலம் பெலவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது மூன்று மாடி வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டபோதும் அடையாளம் காண முடியாத வகையில் சடலம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து தப்பிச்சென்ற தம்பதியினர்
கடந்த 30ஆம் திகதி முதல் தனது சகோதரர் வீடு திரும்பவில்லை என வர்த்தகரின் சகோதரி வெல்லம்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவரது சடலம் என சந்தேகிக்கப்படும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடைசியாக தனது வியாபார இடத்திற்கு காரில் சென்று பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள வீட்டின் சாவியை கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, தொழிலதிபரின் கைத்தொலைபேசி மற்றும் பணப்பையும் காணாமல் போயுள்ளதுடன், அவரது வங்கி அட்டைகளை பயன்படுத்தி 2 விமான டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உண்மையில் வெளிநாடு சென்றுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த வர்த்தகருக்கு சொந்தமானதாக கூறப்படும் கார் நீர்கொழும்பில் உள்ள கேரேஜ் ஒன்றில் நேற்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளுக்காக 3 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் வாகனத்தை விட்டு தப்பிச்சென்ற தம்பதியினர் இந்தோனேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
