5 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய 65 வயதான வர்த்தகர்
மாதம்பே பகுதியில் 5 வயதான ஆரம்ப பாடசாலை சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வரும் கடைக்குச் சென்றுள்ளார்.
தகாத நடத்தை
இதன்போது, சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று சந்தேகநபர் தகாத நடத்தையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயாரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam