கனடாவில் வீட்டு விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
கனடாவில் வீடுகளின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் வீட்டு விலைகள் குறைவடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தொடர்ச்சியாக வீட்டு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியம் வீட்டு விலைகள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
வீடு ஒன்றின் சராசரி விற்பனை விலை
வீடு ஒன்றின் சராசரி விற்பனை விலை 716000 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் தொடர்ச்சியாக ஒரு இலட்சம் டொலர்கள் வரையில் வீட்டு விலைகள் உயர்வடைந்துள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீடு ஒன்றின் சராசரி விலையானது 630,000 டொலர்களாக பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.