இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! எழுந்துள்ள எதிர்ப்பு
பண்டிகைக் காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இருப்பு பகுதிகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதியளிப்பதால் பொருளாதார மத்திய நிலையங்கள் பாரியளவில் பாதிக்கப்படும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருத்தமான செயல் அல்ல
மேலும் கூறுகையில்,“உண்மையில் நடைபாதையில் காய்கறிகளை விற்பனை செய்வது இந்த நேரத்தில் பொருத்தமான செயல் அல்ல.

இது தொடர்பில் நான் அமைச்சருடன் விவாதித்தேன். இது புத்தாண்டு வரை மட்டுமே செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஆனால் இன்று வணிகர்கள் பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொருளாதார மையங்களில் விற்பனை நடவடிக்கைகள் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இந்த நேரத்தில் வீதியோரத்தில் வியாபாரம் மேற்கொள்ளப்படுமாயின் அது பொருளாதார மையங்களை மேலும் பாதிக்கும்.”என கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 21 நிமிடங்கள் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri