யாழ்.நோக்கி அதிகூடிய பயணிகளுடன் பயணித்த அரச பேருந்து - சமூக ஆர்வலர்கள் விசனம்

Covid Jaffna Mannar
By Ashik Apr 30, 2021 08:38 PM GMT
Report

மன்னார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேருந்தில் அதி கூடிய பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் கோவிட் தொற்று சுகாதார நடை முறைகளை மீறி யாழ்ப்பாணம் நோக்கி பயணம் மேற்கொண்டமை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் அரச, தனியார் பேருந்துகள் உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றி, பேருந்தின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றி போக்குவரத்துச் சேவையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்டச் செயலகத்தில் புதன் கிழமை  இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இராணுவம்,பொலிஸ்,கடற்படை அதிகாரிகள்,சுகாதார துறையினர்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கோவிட் தொற்று தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இருந்து மேற்கொள்ளப்படும் அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பாக விசெட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது மன்னாரில் இருந்து மேற்கொள்ளப்படும் அரச , தனியார் போக்குவரத்துச் சேவைகள் உரிய சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற வேண்டும் எனவும், மக்கள் முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளை மேற்கொள்ளுகின்றமை தொடர்பில் பேருந்தின் சாரதி, நடத்துனர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, பேருந்தின் ஆசனங்களுக்கு அமைவாகவே பயணிகளை ஏற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றினால் மன்னார் பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்குவரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேருந்தில் அதி கூடிய பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் பேருந்தின் பின் வாசலில் பயணிகள் தொங்கிக் கொண்டு கோவிட் சுகாதார நடைமுறைகளை மீறி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்தனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US