இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
பேருந்து மற்றும் தொடருந்துகளில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய முறையொன்று அறிமுகமாவது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பேருந்து மற்றும் தொடருந்து பயணிகளுக்கு டிக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (01.02.2023) கையெழுத்திடப்பட்டுள்ளது.
கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்

போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மாகும்புர காலி அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளுக்கு இந்த புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் இந்த முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri