இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து - பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு
புதிய இணைப்பு -12.00PM
றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
படுகாயமடைந்தவர்கள், நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டிய உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இணைப்பு - 11.27AM
றம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
இணைப்பு - 10.55AM
றம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பலர் இன்னும் பேருந்துக்குள்ளேயே சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு - 09.14AM
றம்பொட பகுதியில் இன்று(11) காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு - 08.25AM
றம்பொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
றம்பொட, கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு..
இன்று அதிகாலை நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - திவா















இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
