தனியார் பேருந்து வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் படுகாயம் (Photos)
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.


நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
சூடுபிடிக்கும் காவி உடை களையப்பட்ட விவகாரம் - அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகா சங்கத்தினர்
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam