யாழ்.காங்கேசன்துறையில் இருந்து பேருந்து சேவை ஆரம்பம்
764ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை இனிமேல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் என, அந்த பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
வீதி விடுவிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இந்த பாதை விடுவிப்பு எமக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானது. எமது பேருந்து சேவை இதுவரை வசாவிளான் வரையில் சேவையில் ஈடுபட்டது.
பேருந்து சேவை
இனிமேல் கே.கே.எஸ் வரைக்கும் பயணிக்கும். மீண்டும் அதே மார்க்கம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணிக்கும்.
இந்த பயண சேவைகளை நாம் படிப்படியாக எமது சேவை அட்டவணைகளை மேற்கொண்டு தீர்மானிப்போம்.
பாதை பூட்டப்படுவதற்கு முன்பு நாம் காங்கேசன்துறை சந்தியில் இருந்து எமது சேவையில் ஈடுபட்டதைப் போலவே மீண்டும் எமது சேவைகளை மேற்கொள்வோம்.
அன்ரனிபுரம், மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
