யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலையினூடாக ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை
யாழ் (Jaffna) சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மூலம் பேருந்து சேவைகள் இன்று (23) காலை 9 மணிமுதல் சம்பிரதாயபூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து 788 வழித்தட சங்க பேருந்து உரிமையாளர்களிடம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளின் நலன் கருதி வைத்தியசாலையின் ஊடாக பேருந்து சேவைகளை முன்னெடுக்குமாறு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்கு செல்லும் பல தரப்பினரும்
இந்நிலையில் இன்று முதல் கீரிமலை இளவாலை, தொட்டிலடி, மானிப்பாய், யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடும் 788 வழித்தட தனியார் பேரூந்து சேவையிலுள்ள மூன்று பேருந்துகள் தமது சேவையை குறித்த வைத்தியசாலையின் ஊடாக மேற்கொள்ளவுள்ளன.
இதன் மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பல தரப்பினரும் நன்மைகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் சங்கானை வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், யாழ் மாவட்ட கூட்டிணைக்கபட்ட தனியார் பேருந்து கம்பனிகளின் சங்கத்தின் தலைவர், இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர், சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலை மருத்துவர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam
